

மத்திய அரசின் செலவுகளை குறைக்கும் ஒரு நடவடிக்கையாக நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில் அந்த நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இதனை செயல்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
செலவு நிர்வாக குழு, நஷ்டத்தில் செயல்படும் நிறுவனங்களை விற்பது குறித்து பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிகிறது. இந்த நடவடிக்கையால் பணி யாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. அவர்களுக்கு ஏற்ற தொகை வழங்கும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது.
சமீபத்தில் வெளியான அரசு அறிக்கையின்படி 77 பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கு கின்றன. இந்த நிறுவனங்களின் மொத்த நஷ்டம் ரூ.27,360 கோடி ஆகும். பாரத் கோல்ட் மைன்ஸ், சைக்கிள் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உள்ளிட்ட சில நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
2014-ம் ஆண்டு செப்டம்பரில் செலவு மேலாண்மை குழு தன்னு டைய பரிந்துரையை செய்தது. அப்போது முடிந்தவரை அந்த நிறுவனத்தையோ அல்லது அதன் சொத்துகளையோ விற்குமாறு பரிந்துரை செய்யப்பட்டது.
கடந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறும் போது, எந்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை செய்யலாம் என்பதை நிதி ஆயோக் கண்டுபிடிக்கும் என்று கூறினார்.