பெருந்தொற்று முதல் போர் வரை - தொழில்புரிவோர் நெருக்கடிகளை நிர்வகிக்க 3 உத்திகள்!

பெருந்தொற்று முதல் போர் வரை - தொழில்புரிவோர் நெருக்கடிகளை நிர்வகிக்க 3 உத்திகள்!
Updated on
3 min read

கோவிட்19 இல்லாமல், காலநிலை மாற்றத்தின் நெருக்கடிகள் இல்லாமல், உக்ரைன் போர் இல்லாமல் ஒருநாள் மீண்டும் வரலாம். ஆனால், பொதுவான ஒரு நிலைத்தன்மையுடன் இயங்கும் காலம் இனி எப்போதும் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. இனி தொற்றுநோய்கள், நெருக்கடிகள், இயற்கை பேரிடர்கள் போன்ற காரணிகளால் மனிதகுலத்தின் சுற்றுச்சூழல் நெருக்கடிக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்படுள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள் தங்களின் செயல்பாட்டு முறைகளை மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது. பெருந்தொற்று, பருவநிலை மாற்றம், போர் அபாயம் என அதிகரித்து வரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் உலக அளவிலான தொழில்துறை, அதன் நெருக்கடிகளில் இருந்து மீண்டு வர முயல்கிறது. எதிர்கால தொழிலுக்குத் தேவையான மூன்று வழிமுறைகளைச் சொல்கிறது இந்தக் கட்டுரை

சொந்தமாக ஒரு தொழிலை நடத்தி வருகிறவர்கள் அல்லது தொழிலை நிர்வகித்து வருபவர்களுக்கு கடந்த சில வருடங்கள் சோதனை மிகுந்த காலமாகவே இருந்திருக்கின்றன. உலக அளவில் நடைமுறைப்படுத்தப்பட்ட கரோனா பொது முடக்கம் உலகின் அனைத்து தொழில்களையும் மூடச் செய்தது. லாபமாக இயங்கி வந்த தொழில்கள் நஷ்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. பெரும்பாலான சிறு தொழில்கள் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இரண்டு ஆண்டுகள் நீண்ட பொது முடக்கத்திற்கு பின்பு, வணிக நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. இந்த நிலையில், உலகம் மீண்டும் ஒரு நெருக்கடிக்குள் நுழையலாம் என்பதற்கான அறிகுறிகள் வலுவாகவே தெரிகின்றது. ஏனெனில் உலகம் நெருக்கடிகளைத் தூண்டும் ஒரு யுகத்திற்குள் நுழைந்து விட்டதாகவே தெரிகிறது.

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பாக, காலநிலை நெருக்கடிகளால் ஏற்றப்பட்ட தீவிர பருவநிலை மாற்றத்தால் உலகம் சீர்குலைவைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர் கோவிட் 19 பிரச்சினையை எதிர்கொண்டது. சில நாடுகள் கோவிட் 19-க்கு எதிரான போராட்டத்தில் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்திருக்கின்றன. தற்போது உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் ஆக்கிரமிப்புப் போர், உலகலாவிய புவிசார் அரசியலை மாற்றியமைத்திருப்பதோடு, நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உணவு மற்றும் எரிசக்தி பொருள்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்திருக்கிறது. இது மற்ற துறைகள் அனைத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட்19 இல்லாமல், காலநிலை மாற்றத்தின் நெருக்கடிகள் இல்லாமல், உக்ரைன் போர் இல்லாமல் ஒருநாள் மீண்டும் வரலாம். ஆனால், பொதுவான ஒரு நிலைத்தன்மையுடன் இயங்கும் காலம் இனி எப்போதும் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. இனி தொற்றுநோய்கள், நெருக்கடிகள், இயற்கை பேரிடர்கள் போன்ற காரணிகளால் மனிதகுலத்தின் சுற்றுச்சூழல் நெருக்கடிக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்படுள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள் தங்களின் செயல்பாட்டு முறைகளை மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதாவது, தொழில் நிறுவனங்கள் தற்போதுள்ள நெருக்கடிகளை சமாளிக்கும் அதே நேரத்தில், எதிர்காலத்தில் உருவாக இருக்கும் நெருக்கடிகளை கையாள சிறப்பான முறையில் தயாராவதோடு, நெருக்கடிகள் ஏற்படும்போது அதனை நிர்வகிப்பதில் தங்களின் சொந்தப் பங்கை முன்னிறுத்திக்கொள்ள வேண்டும். இதனை மனதில் கொண்டு, நிறுவனங்கள் இனி கையாள வேண்டி மூன்று வணிக உத்திகளை இனி பார்க்கலாம்.

1. நெருக்கடிகளுக்கு எதிர்வினையாற்றுங்கள்: நெருக்கடிகளை சிறப்பாக கையாண்டு, அதற்கு எதிவினையாற்றும் ஒரு தொழில் மாதிரியே (மாடல்) தற்போதைய முக்கியத் தேவையாக உள்ளது. உயிர் வாழ்வதற்கான இயற்கை பண்பான இந்தக் கூறு, தொழில் நிறுவனங்கள் தங்களுக்குள் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைக் குறைக்கச் செய்யும் நடவடிக்கைகளில் தானாகவே அமைந்திருக்கும். அதாவது, நெருக்கடிகளுக்குப் பின்னர் வணிக நிறுவனங்கள் இயங்கத் தொடங்கும்போது, தங்களது பழைய இயல்பையே மீண்டும் பின்பற்றாமல், புதிய இயல்புடன் மேலாண்மை நடைமுறைகளைச் சீரமைக்க வேண்டும். இந்தப் புதிய மாதிரி, தேவைப்படும்போது நெருக்கடிகளைக் குறைக்கும் அதேவேளையில், பரந்த அளவிலான நெருக்கடிகளை இயன்ற அளவில் சரிசெய்வதாகவும் அமைந்திருக்கும்.

பெட்ரோலிய பொருள் விற்பனை நிறுவனங்களான ஷெல் (Shell) மற்றும் பிபி (BP) இத்தகைய புதிய வணிக மாதிரிகளை முதலில் செய்யத் தொடங்கும் என்று தோன்றுகிறது. காலநிலை நெடுக்கடிக்கும், நிலையான ஆற்றல் தட்டுப்பாட்டிற்கும் இந்த நிறுவனங்கள் தெரிந்தே பங்காற்றி வருகின்றன என்ற குற்றச்சாட்டை இந்த இரு நிறுவனங்களும் நீண்ட காலமாக சந்தித்து வந்திருக்கின்றன. இந்தநிலையில், இந்த நெருக்கடியை எதிர்கொள்ளுவதற்கு அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள இருக்கிறார்கள். அதாவது, பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாடு மற்றும் அதற்கான பிரச்சாரங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த நிறுவனங்கள் தங்களின் வணிகத்தின் முக்கிய அம்சங்களை மாற்றத் தொடங்கியுள்ளன. அதன் முதல் நகர்வாக பெட்ரோல் நிரப்பும் நிலையங்களை மின்சார வாகனங்களைச் சார்ஜ் செய்யும் வகையில் அதன் உள்கட்டமைப்பை மாற்றி வருவதாக தெரிகிறது. காலநிலை நெருக்கடியில் பயணிக்கும்போது இதுபோன்ற பல சூழலுக்கு உகந்த பசுமையான மாற்றங்களை அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ளலாம்.

2. எதிர்கால இன்னல்களுக்கு தயாராக இருங்கள்: தொழில்கள் ஸ்திரத்தன்மை அடிப்படையிலான மாதிரிகளில் இருந்து தற்போதைய வணிக யதார்த்தங்களாக மாறிவரும் நிலைற்றத் தன்மை, சிக்கல் மற்றும் தெளிவின்மை ஆகியவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு வணிகத்தின் நம்மைக்கான மதிப்புமிக்க திட்டம் என்பது அதன் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் சமூகத்தை உள்ளடக்கியதாகவே இருக்கும். புதிய உலகத்திற்கான தொழில் மாதிரியை உருவாக்கும் போது அது நீண்ட காலத்திற்கு ஏற்றவகையிலான திட்டங்களை கொண்டிருக்க வேண்டும். அதேபோல் எல்லா வகையான நெருக்கடிகளை கையாளும் வகையிலும், உடனடியாக மாறிக் கொள்ளும் தன்மையைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். வேகமாக மாறக்கூடிய ஃபேஷன் மற்றும் தொழில்நுட்ப பற்று போன்ற குறுகிய கால விருப்பங்களை விட, உடல் நலன், உணவு மற்றும் பாதுகாப்பு போன்ற நீண்ட காலம் நீடிக்கக்கூடிய அடிப்படைத் தேவைகள் மற்றும் சேவைகள் வழங்குவதை இந்த வகை வணிக மாதிரிகளுக்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

மாற்றமடைந்து வரும் உலகில், நவீன வீடுகளுக்குத் தேவையான மாறி வரும் அனைத்து தேவைகளைப் பூர்த்தி செய்யும், மின்சாதன பொருள்களை வழங்குவதை பிரதான நோக்கமாக கொண்டிருக்கும் சீனாவின் மின்சாரப்பொருள் தயாரிப்பு நிறுனமான ஹேயிர்-ஐ (Haier) இந்த வகை மாதிரிக்கு ஒரு சிறந்த உதாரணம். இந்த நிறுவனம், காற்று சுத்திகரிப்பானோடு கூடிய குளிரூட்டியை உருவாக்குவதன் மூலம், ஆசியாவின் காற்று மாசு நெருக்கடிக்கு ஹேயிர் நிறுவனம் தீர்வளிக்க முயல்கிறது.

இதற்காக, ஹேயிர் அதன் தனித்துவமான "RenDanHeYi" (ஒற்றுமையுடன் செயல்படும் ஒரு தனித்துமிக்க நபர்) என்ற பிரத்தியோக முறையை பயன்படுத்துகிறது. அடிப்படையில் ஹேயிர் நிறுவனம், அரை தன்னாட்சியுடைய நிறுவனங்களின் கூட்டமைப்பாகும். இந்த முறையால், குறு தொழில்முனைவோருக்கு சுய ஒழுக்கத்துடன் கூடிய தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் கூட்டப் பொறுப்பை வழங்கப்படுகிறது. இது ஹேயிர் நிறுவனத்தை ஒரு சூழலுக்கேற்ப மாறக்கூடிய சுறுசுறுப்பான அமைப்பாக மாற்றுகிறது. சிறு நிறுவனங்களின் கூட்டமைப்பாக செயல்படுவதால், ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையளர்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி, அவர்களின் மாறிவரும் தேவைகளை அறிந்து கொள்ளவும், புதிய நெருக்கடிகளுக்கேற்ப வணிகத்தை புதிப்பித்துக்கொள்ளவும் உதவுகிறது. ஹேயிரின் வணிக மாதிரியில் உள்ள இந்த சிறப்பம்சம் காரணமாக, கோவிட் -19 மற்றும் அதற்குப் பிந்தைய காலத்திலும் அவர்களால் சிறப்பாக செயல்பட முடிகிறது.

3. நாளைய நெடுக்கடியை தடுக்க உதவுதல்: இறுதியாக வணிகம் எதிர்கால நெருக்கடிகளைக் குறைத்து அல்லது தவிர்த்து கொள்ளும் புதிய மாதிரிகளை கைகொள்ளுவதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். கோவிட்-19, உக்ரைன் நெருக்கடி, காலநிலை மாற்றம் என இன்னும் தொடரும் சிக்கல்கள், பல வணிக மாதிரிகளுக்கு மற்ற விஷயங்களை அடுத்த பெரிய நெருக்கடியாக மாற்றாமல் இருக்க உதவுகின்றன. உதாரணமாக, சில நிறுவனங்கள் எதிர்காலத்தின் அமைதியை சீர்குலைக்கும் ஆயுத மோதலைத் தடுக்கும் வகையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வணிக மாதிரிகளை ஏற்றுக்கொண்டுள்ளன.

கொலம்பியா கொரில்லா குழுவின் முன்னாள் உறுப்பினர்கள், மோதலின்போது மக்கள் பார்வையில் மறைக்கப்பட்டிருந்த இடங்களை காட்டும் வகையில் வணிக நோக்கிலான சாகசப் பயணங்களை உருவாக்குவது, ஹூட்டஸ் மற்றும் டுட்ஸிஸ் இன மக்களுக்கிடையே சமரசம் ஏற்படுத்த இருவரது ஒத்துழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட ருவாண்டா காபி கூட்டுறவு நிறுவம் போன்றவை இதற்கான உதாரணங்களாகும்.

நெருக்கடிகள் அதிகரித்து வரும் தற்காலச் சூழலில் தொழில்களை நிர்வகிப்பது சவாலான ஒரு விஷயம்தான். இருந்தாலும், வணிக மாதிரிகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளை மாற்றுவது தற்போதைய மற்றும் எதிர்கால நெருக்கடிகளை சமாளிப்பதற்கும், எதிர்கால நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கும் உதவும் அதேவேளையில் வணிகம் நீண்டகாலம் தொடர்வதற்கும் உதவுகிறது.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின், தொழில்முனைவு மற்றும் புதுமைகள் துறையின் மூத்த விரிவுரையாளர் ஆலிவர் லாஷ் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது.

தகவல் உறுதுணை: தி கான்வர்சேஷன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in