இந்திய ஏற்றுமதி மார்ச் மாதம் 14.15% அதிகரிப்பு

இந்திய ஏற்றுமதி மார்ச் மாதம் 14.15% அதிகரிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மார்ச் மாதத்தில் 6,399 கோடி டாலராக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 14.15 சதவீதம் அதிகம். அதேபோல் இறக்குமதியும் சென்ற மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகரித்து 7,390 கோடி டாலராக உள்ளது.

வர்த்தகப் பற்றாக்குறை இவ்வாண்டு மார்ச் மாதம் 1,851 கோடி டாலராக உள்ளது. சென்ற மார்ச்சில் 1,364 கோடி டாலராக இருந்தது. மொத்தமாக 2021-22 நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 66,889 கோடி டாலராக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2020-21 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 34.34 %அதிகம். இதுபோல 2021-22 நிதிஆண்டில் இறக்குமதி 75,668 கோடி டாலராக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது 2020-21 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 47.80% அதிகம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in