

இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் என்.எஸ்.ராகவன் மற்றும் அவர் மனைவி ஜமுனா ராகவன் 94.56 கோடி ரூபாய் மதிப்புள்ள இன்போசிஸ் பங்குகளை சந்தையில் வாங்கியுள்ளனர். 5,78,279 பங்குகள் சராசரியாக 1,220.15 ரூபாய்க்கு ராகவன் வாங்கி இருக்கிறார். அவர் மனைவி 1,96,721 பங்குகளை சராசரியாக 1,220.25 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் இவரும் ஒருவர். 2000-ம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து இவர் ஓய்வு பெற்றுவிட்டார். அதன் பிறகு நண்பர்களுடன் சேர்ந்து நடாத்துர் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் என்னும் நிறுவனத்தை தொடங்கினார். அவரது மகன் ஆனந்த் நடாத்துர், இந்த நிறுவனத்தில் இயக்குநராக இருக்கிறார்.
ராகவன் மற்றும் ஜமுனா ராகவன் வாங்கிய பங்குகள் முன்னதாக ஆனந்திடம் இருந்ததாக என்எஸ்இ தகவல்கள் தெரிவிக்கின்றன.