

கடன் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் விஜய் மல்லையா அமெரிக்காவில் உள்ள மெண்டாசினோ புரூவிங் நிறுவனத்தில் இருந்து 1.5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுக் கொண்டிருக்கிறார். அந்த நிறுவன மும் கடன் பிரச்சினையில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மெண்டாசினோ புரூவிங் நிறுவனத்தின் இயக்குநர் தலை வராக மல்லையா இருக்கிறார். கிங்பிஷர் நிறுவனத்தின் பியர் வகைகளை தயாரித்து விற்பனை செய்வதற்கான பிரத்யேக உரிமை இந்த நிறுவனத்திடம் உள்ளது.
விஜய் மல்லையா உருவாக் கிய யூபி ஹோல்டிங்க்ஸ் நிறுவனம்தான் மெண்டாசினோ புரூவிங் நிறுவனத்தின் பெரும் பான்மையான பங்குகளை வைத்திருக்கிறது. இந்த நிறுவனம் அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையத்துக்கு தாக்கல் செய்த அறிக்கையில் மல்லையா வுக்கு கடந்த வருடம் 1.71 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் சலுகைகளை வழங்கியுள்ளதாக அறிவித்திருக்கிறது. இயக்குநர் குழு தலைவராக இருப்பது மற்றும் பியர்களை விற்பனை செய்ய உதவியாக இருந்ததற்காக இந்த சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் தெரிவித்திருக்கிறது.
மெண்டாசினோ புரூவிங் நிறுவனத்தில், யுனைடெட் பிரீவரிஸ் அமெரிக்கா மற்றும் இன்வெர்சனஸ் ஆகிய நிறுவனங்கள் முக்கிய பங்குதாரர்கள் ஆகும். இந்த நிறுவ னங்கள் ரிக்பி இன்டர் நேஷனல் குழுமத்தின் கட்டுப் பாட்டில் உள் ளன. ரிக்பி நிறுவனம் யூனைடெட் பிரீவரிஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத் தின் துணை நிறுவனம் ஆகும்.