

நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித் ததற்காக மூன்று நிறுவனங் களுக்கு தலா 25 லட்ச ரூபாயை அபராதமாக உச்ச நீதிமன்றம் விதித்திருக்கிறது. பணம் இருக் கிறது என்ற காரணத்துக்காக நீதிமன்ற நேரத்தை வீணடித் ததற்கு இந்த வழக்கு ஒரு உதா ரணம் அதனால் மூன்று நிறுவனங் களுக்கும் தலா 25 லட்ச ரூபாய் அபராதம் விதிப்பது சரியாக இருக்கும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.
இந்த தொகையை தேசிய சட்ட சேவை ஆணையத்துக்கு வழங்க வேண்டும். இந்த தொகையை பயன்படுத்தி வசதி இல்லாத காரணத்தால் நிவாரணம் கிடைக் காதவர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் ஜே. செலமேஸ்வர் மற்றும் ஏ.எம். சாப்ரே கூறினார்கள்.
ஜெர்மனியை சேர்ந்த எம்ஜிஜி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கோயல் கேஸஸ் (ஜிஜிஎல்) மற்றும் பாம்பே ஆக்சிஜன் கார்ப்பரேஷன் (பிசிஓஎல்) ஆகிய நிறுவனங் களுக்கு அபராதம் விதிக்கப்பட் டிருக்கிறது. ஆரம்ப கட்டத்தில் ஜெர்மனியை சேர்ந்த எம்ஜிஜி நிறுவனம் ஜிஜிஎல் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. தவிர இதேபோல ஒரு ஒப்பந்தத்தில் பிஓசிஎல் நிறுவனத்திடமும் ஜெர்மனியைச் சேர்ந்த எம்ஜிஜி நிறுவனம் கையெழுத்திடுகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து ஜிஜிஎல் நிறுவனம் அதிருப்தி தெரிவிக்கிறது. இந்த வழக்கு கடந்த 18 வருடங்களுக்கு மேலாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.