Published : 08 Apr 2022 01:44 PM
Last Updated : 08 Apr 2022 01:44 PM

விலைவாசி உயரும் ஆபத்து; பணவீக்கம் உயர்வு: ரிசர்வ் வங்கி சொல்வதென்ன?

மும்பை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களாலும் பொருட்களின் தேவை அதிகரித்து வருவதாலும் பணவீக்கம் உயர்ந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது வரும் காலத்திலும் ஏற்றத்தை நோக்கியே இருப்பதாகவும் கூறியுள்ளது.

2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில் இன்று 10-வது நிதிக்கொள்கைக் குழுக்கூட்டம் மும்பை நடந்தது. கூட்டத்துக்கு பின்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் கூறிய முக்கிய தகவல்கள்:

* கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4 சதவீதமாகவே நீடிக்கும்.

* வங்கிகளின் கடன்களுக்காக வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. ரிவர்ஸ் ரெப்போ 3.5% ஆக நீடிக்கும்.

* 2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

* நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி முன்பு மதிப்பிட் இருந்த நிலையில் தற்போத வளர்ச்சி விகிதத்தை குறைத்துள்ளது.

* முன்னதாக நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது.

* 2022- 2023 ஆம் நிதியாண்டுக்கான சில்லறை பணவீக்கம் ஏற்கனவே கணிக்கப்பட்டு இருந்த 4.5 சதவீதம், 5.7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு கணிக்கப்ப்டடுள்ளது.

* நாட்டின் பணவீக்கம் முதல் காலாண்டில் 6.3%, 2வது காலாண்டில் 5%, 3வது காலாண்டில் 5.4%, 4வது காலாண்டில் 5.1% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

* பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தேவை அதிகரித்து வருவதும் பணவீக்கம் உயர காரணம்.

* கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலராக இருந்தால், 2022-23ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி முதல் காலாண்டில் 16.2%, 2வது காலாண்டில் 6.2%, 3வது காலாண்டில் 4.1%, 4வது காலாண்டில் 4% ஆக இருக்கும்

* வரும் காலங்களிலும் பணிவீக்கம் ஏறுமுகத்தில் இருக்க வாய்ப்பு இருந்தாலும் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x