வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; பொருளாதார வளர்ச்சி குறையும்: ரிசர்வ் வங்கி தகவல்

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; பொருளாதார வளர்ச்சி குறையும்: ரிசர்வ் வங்கி தகவல்
Updated on
1 min read

மும்பை: 2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7.8 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாகக் குறைத்து ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கைக் கூட்டத்தில் இன்று அறிவித்துள்ளது.

2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 2020-ம் ஆண்டு மே 22-ம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. குறுகிய கால கடன் வட்டிவிகிதம் 4%ஆக நீடிக்கிறது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35%ஆக நீடிக்கிறது.

இந்தநிலையில் புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில் இன்று 10-வது நிதிக்கொள்கைக் குழுக்கூட்டம் மும்பை நடந்தது. இந்தக் கூட்டத்தில் வட்டி வீதம் மாற்றப்படவில்லை. தற்போது குறுகியகாலக் கடனுக்கான வட்டி வீதம் 4 சதவீதமாக நீடிக்கும் என்றும், ரிவர்ஸ் ரெப்போ 3.5 சதவீதமாக நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறுகிய கால மற்றும் நீண்டகால கடன்களை பெறுகின்றன. இந்த கடன்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட வட்டியை வங்கிகளிடம் பெறுகிறது. குறுகிய கால கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதமே ரெப்போ வட்டி விகிதம் ஆகும்.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:

குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4 சதவீதமாகவே நீடிக்கும். வங்கிகளின் கடன்களுக்காக வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. ரிவர்ஸ் ரெப்போ 3.5% ஆக நீடிக்கும்.

2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இருக்கும். கச்சா எண்ணெய் விலையை பேரல் 100 டாலர் என்ற அடிப்படையில் வைத்துதான் பொருளாதார வளர்ச்சி குறித்த கணக்கீடப்பட்டது. தற்போது இதன் விலை உயர்வு காரணமாக வளர்ச்சி விகிதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் பணவீக்கமும் சராசரியாக 5.7 சதவீதமாக இருக்கும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

முன்னதாக நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in