இரண்டு வாரங்களில் லிட்டருக்கு ரூ.10 வரை அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் இன்றைய விலை என்ன?

இரண்டு வாரங்களில் லிட்டருக்கு ரூ.10 வரை அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் இன்றைய விலை என்ன?
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 வரை அதிகரித்து சாமான்ய மக்களை திகைப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தொடர்ச்சியாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசியும் அதிகரித்துள்ளது. தேநீர் கடைகள் கூட விலை ஏற்றியுள்ளன.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் எண்ணெய் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுகிறது.
ஆனால், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் கடந்த நவம்பர் 2021க்குப் பின்னர் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காணாமல் இருந்தது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் கடந்த அக்டோபருக்குப் பின்னர் ஏற்றமில்லாமல் இருந்தது. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை மட்டுமே ஏற்றம் கண்டது.

கடந்த 2021 நவம்பர் 4 ஆம் தேதிக்குப் பின்னர் முதன்முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றப்பட்டது. 137 நாட்களுக்குப் பின்னர் விலையேற்றம் செய்யப்பட்ட நிலையில் அன்றிலிருந்து இன்று வரை 13 முறை விலை உயர்ந்துவிட்டது.

ஏப்ரல் 5 விலை நிலவரம்:

நகரங்கள் பெட்ரோல் (ரூபாய்) டீசல் (ரூபாய்)
டெல்லி 104.61 95.87
மும்பை 119.67 103.92
கொல்கத்தா 114.28 99.02
சென்னை 110.09 100.18

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in