Published : 02 Apr 2022 09:48 AM
Last Updated : 02 Apr 2022 09:48 AM

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.268 உயர்வு: உணவகங்களில் விலை அதிகரிக்கும் அபாயம்

சென்னை: சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.268.50 உயர்ந்து, ரூ.2,406 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

இதில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தினந்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல்காஸ் விலை மாதத்துக்கு இரண்டு முறை என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது.

இதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.101 ஆக அதிகரித்து, ரூ.2,234.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கான வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன. இதன்படி, 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.103.50 குறைக்கப்பட்டது.

சிலிண்டர் விலை ரூ.2,406

இந்நிலையில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலைநேற்று ரூ.268.50 ஆக அதிகரித்துரூ.2,406 ஆக நிர்ணயிக்கப்பட் டுள்ளது.

ஒரே நேரத்தில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.268 உயர்த்தப்பட்டுள்ளதால், உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்டவற்றில் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x