

கிங்பிஷர் நிறுவனத்தின் கடன் பிரச்சினை விவகாரம் பெரிதாக உருவெடுத்துள்ள நிலையில் யுனைடெட் பிரீவரிஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேற விஜய் மல்லையாவுக்கு 500 கோடி ரூபாய் கொடுக்க நிறுவனம் முன்வந்தது. தவிர அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த செய்தி வெளியான உடன் விஜய் மல்லையாவுக்கு நெருக்கடி அதிகமானது. அதன் பிறகு ட்விட்டரில் தொடர்ந்து விஜய் மல்லையா பல கருத்துகளை பகிர்ந்துவந்தார். சில நாட்களுக்கு முன்பு என்னுடைய தொழிலில் என் மகன் சித்தார்த்துக்கு எந்த தொடர்பும் இல்லை. நீங்கள் திட்ட வேண்டும் என்றால் என்னை திட்டுங்கள் என்று விஜய் மல்லையா ட்விட் செய்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 31-ம் தேதியில் இருந்து யுபிஹெச்எல் நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகள் ஏதும் இல்லாத இயக்குநர் பதவில் இருந்து சித்தார்த் மல்லையா ராஜினாமா செய்திருப்பதாக பிஎஸ்இ-க்கு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு வாங்கிய கடனில் 4,000 கோடி ரூபாயை திருப்பி கொடுப்பதாக விஜய் மல்லையா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.