

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்று ஏர்டெல். இந்நிறுவனம் தனது ப்ரீபெய்டு சிம் கார்டு பயனர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இரண்டு பிளான்களை அறிமுகம் செய்துள்ளது.
முன்னதாக ஜியோ நிறுவனம் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானை 'ட்ரூ பிளான்' என சொல்லி அறிமுகம் செய்திருந்தது. பொதுவாக மாதாந்திர ப்ரீபெய்டு பிளான்கள் 28 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கொண்டிருந்தன. இந்நிலையில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), டெலிகாம் ஆபரேட்டர்கள் குறைந்தபட்சம் ஒரு ரீசார்ஜ் திட்டத்தையேனும் 30 நாட்களுக்கு வழங்குமாறு சொல்லி இருந்தது. இந்த உத்தரவை ஏற்றே ஏர்டெல் மற்றும் ஜியோ தற்போது 30 நாட்கள் வேலிடிட்டி பிளானை கொண்டுள்ளது.
புதிய திட்டங்களின் விலை மற்றும் பலன்கள்?
பிளான் 1: ரூபாய் 296 ப்ரீபெய்டு பிளான் மூலம் அன்லிமிடட் தொலைபேசி அழைப்பு வசதி, தினசரி 100 குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் 25ஜிபி 4ஜி அதிவேக இணைய இணைப்பு வசதியை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
பிளான் 2: ரூபாய் 310 ப்ரீபெய்டு பிளான் மூலம் அன்லிமிடட் தொலைபேசி அழைப்பு வசதி, தினசரி 100 குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் தினசரி 2ஜிபி மொபைல் டேட்டா பயனர்கள் பெறலாம் என சொல்லப்பட்டுள்ளது. தினசரி மொபைல் டேட்டா பயன்படுத்தி முடித்தவர்களுக்கு 64kbps வேகத்தில் இணைய இணைப்பு கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதோடு இரண்டு திட்டங்களிலும் பயனர்களுக்கு 30 நாட்கள் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் வெர்ஷன் இலவசமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு மேலும் சில சலுகைகளும் பயனர்களுக்கு கிடைக்கிறது.
இதே போல ஜியோ நிறுவனம் 256 ரூபாய்க்கு 30 நாட்கள் வேலிடிட்டி பிளானை அறிமுகம் செய்துள்ளது. வோடாபோன் ஐடியா (Vi) நிறுவனம் 31 மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இது குறித்த தகவல்கள் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் வலைதளம் மற்றும் மொபைல் அப்ளிகேஷன்களில் இடம்பெற்றுள்ளது.