

நீண்ட காலத்துக்கு இந்தியாவில் இரட்டை இலக்க வளர்ச்சி இருக்க வேண்டும் என்றால் தேவையற்ற விதிகளையும் நடைமுறைகளையும் நீக்க வேண்டும் என்று நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார். புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் நம்முடைய நகரங்களை மேலும் போட்டிக்குரியவையாக மாற்ற வேண்டும். கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் சீர்த்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். தற்போது இருக்கும் விதிமுறைகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவாது. உள்நாட்டு சந்தையை வைத்து மட்டுமே எந்த நாடும் வளர்ச்சி அடைய முடியாது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதனால் வளர்ச்சி உயரும் என்று அமிதாப் காந்த் கூறினார். இந்த கருத்தரங்கில் பாதுகாப்பு, விவசாய மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.