நாட்டின் பணவீக்கம் 6.01% ஆக அதிகரிப்பு

நாட்டின் பணவீக்கம் 6.01% ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

மே மாதத்திற்கான நாட்டின் பணவீக்கம் 6.01% ஆக அதிகரித்துள்ளது. முந்தைய மாதத்தில் பணவீக்கம் 5.20% ஆக இருந்தது.

உணவுப் பொருட்களின் விலை உயர்வு, காபி, தேநீர் போன்ற பானங்கள் விலை மற்றும் மீன், காய்கறி விலைவாசி உயர்வால் பணவீக்கம் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் மொத்த விற்பனை விலை அளவின்படி கணிக்கப்பட்ட பணவீக்கம் 4.58% ஆக இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டு மே மாதத்தில் உணவு பணவீக்கம் 6.01% ஆக உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 6.4% ஆக இருந்த பணவீக்கம் 5 மாதங்களுக்குப் பிறகு இந்த மாதம் கடுமையாக உயர்ந்துள்ளது.

வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில்: கடந்த மாதம் காபி விலை 23%, கோழி விலை 7%, மீன் விலை 6%, டீ, பழங்கள், காய்கறிகள் விலை 4% அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வாலேயே பணவீக்கம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு மேற்கொண்டுள்ள பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளால் பொருள்களின் விலை குறைந்து, பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது என்று மத்திய நிதித் துறைச் செயலர் அரவிந்த் மாயாராம் சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in