பெட்ரோல், டீசல் விலை 5 நாட்களில் 4வது முறையாக உயர்வு: லிட்டருக்கு ரூ.3.20 வரை கூடியுள்ளதால் மக்கள் அதிருப்தி

பெட்ரோல், டீசல் விலை 5 நாட்களில் 4வது முறையாக உயர்வு: லிட்டருக்கு ரூ.3.20 வரை கூடியுள்ளதால் மக்கள் அதிருப்தி
Updated on
1 min read

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை கடந்த 5 நாட்களில் 4வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்தமாக இந்த 5 நாட்களில் லிட்டருக்கு ரூ.3.20 வரை விலை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து, மத்திய அரசு வரி குறைப்பு செய்து பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10-ம் குறைத்தது. கடந்தாண்டு நவ.4-ம் தேதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த விலைக் குறைப்புக்குப் பிறகு, 137 நாட்களாக விலை உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில் மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. டொடர்ந்து 4வது முறையாக இன்று (மார்ச் 26) பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் 4வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது சாமான்ய மக்கள் மத்தியில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிசில் எனப்படும் முதலீடுகள் தொடர்பான பகுப்பாய்வு நிறுவனம் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.9 முதல் ரூ.10 வரைக்கும் அதிகரிக்கலாம் எனக் கணித்துள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் பிரன்ட் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு 110 முதல் 120 டாலர் வரை அதிகரிக்கும் போது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளது.

இந்தியா தனது எரிபொருள் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி மூலமே எதிர்கொள்கிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்தை பதம் பார்க்கும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:

நகரங்கள் பெட்ரோல் (ரூபாய்) டீசல் (ரூபாய்)
சென்னை 104.43 94.47
மும்பை 113.35 97.55
டெல்லி 98.61 89.87
கொல்கத்தா 108.01 93.01

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in