

புதுடெல்லி: பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா 400 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற லட்சிய இலக்கை நிர்ணயித்து சாதித்துள்ளது, நமது தற்சார்பு இந்தியா பயணத்தில் இதுவொரு முக்கிய சாதனையாகும், உள்ளூர் பொருட்கள் உலகளவில் செல்கிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
400 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற லட்சிய இலக்கை குறித்த காலத்திற்கு 9 நாள் முன்னதாகவே அடைந்திருப்பதற்காக விவசாயிகள், நெசவாளர்கள், எம்எஸ்எம்இ-க்கள், பொருள் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
“பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா முதன் முறையாக 400 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற லட்சிய இலக்கை நிர்ணயித்து அதனை அடைந்துள்ளது. இந்த வெற்றிக்காக நமது விவசாயிகள், நெசவாளர்கள், எம்எஸ்எம்இ-க்கள், பொருள் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரை நான் பாராட்டுகிறேன்.
நமது தற்சார்பு இந்தியா பயணத்தில் இதுவொரு முக்கிய சாதனையாகும். உள்ளூர் பொருட்கள் உலகளவில் செல்கிறது”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.