

தென்னிந்திய தொழில் வர்த்தக சபை (சிக்கி) அமைப்பு சிங்கப் பூரைச் சேர்ந்த டெக்பிரிட்ஜ் வெஞ் சர்ஸ் பிடிஇ லிமிடெட் (டிபிவி) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
ஆலைகளின் கரியமில வாயு வெளியேற்றம் காரணமாக புவி வெப்ப நிலை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இங்குள்ள நிறுவனங் களுக்கு பசுமை காப்பு தொழில் நுட்பத்தை சிங்கப்பூர் நிறுவனம் அளிப்பதற்காக இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. மறு சுழற்சி, கழிவிலிருந்து மின் சாரம், மின் சிக்கனம், மேம்பட்ட உபகரணங்கள், நீர் சேமிப்பு உள்ளிட்டவற்றில் சர்வதேச அளவிலான தொழில்நுட்பத்தை அளிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது.
டிபிவி சார்பில் அதன் தலைமைச் செயல் அதிகாரி வூன் ஹோவும், சிக்கி தலைவர் பழனி ஜி பெரியசாமியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டனர்.