

தொழிலதிபர் விஜய் மல்லையா தற்போது இங்கிலாந்தில் ஹெர்ட்போர்ஷையர் பகுதியில் உள்ள சொகுசான மேன்ஷனில் (விடுதி) வசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலை `சண்டே டைம்ஸ்’ வெளியிட்டுள்ளது.
பார்முலா 1 கார் பந்தய வீரர் லூவிஸ் ஹாமில்டனின் தந்தையிடமிருந்து இந்த விடுதி வாங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 1.5 கோடி டாலராகும் ( சுமார் ரூ. 100 கோடி). வெளிநாட்டில் உள்ள தொடர்புகள் மூலம் இந்த விடுதி வாங்கப்பட்டுள்ளது.
பொதுவாக நிறுவனங் கள் வெளிநாடுகளில் உள்ள தொடர்புகள் மூலமாக இதுபோன்ற விடுதிகளை வாங்குவது வழக்கம். இப்போது இதுபோன்று சொத்து களை வாங்குவது பிரிட்டனில் கண் காணிப்புக்குள்ளாகியுள்ளது. வரிச் சலுகைக்காக இவ்விதம் சொத்துகளை வாங்குவதும் உண்டு.
இதுபோன்று நிறுவனங்களுக் காக வாங்கியுள்ள சொத்து மதிப்பு 24.50 கோடி டாலராகும்.
மல்லையாவுக்கு வழங்கப்பட்ட ராஜீய பிரதிநிதிகளுக்கான பாஸ் போர்ட்டை இந்திய வெளியுறவு அமைச்சகம் முடக்கியுள்ளது. இத னால் அவர் இங்கிலாந்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கான சூழல் அதிகரித்துள்ளது. இருப்பினும் மல்லையாவின் பெயர் பிரிட்டன் வாக்காளர் பட்டியலில் உள்ளது. அதிலும் அவர் ஹெர்ட்போர்ஷயர் கவுன்டி விலாசமும் கொடுக்கப் பட்டுள்ளது.