

புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் மார்ச் 16 வரையிலான நிலவரப்படி ரூ.13.63 லட்சம் கோடி நேரடி வரி வசூலாகியுள்ளது. 2020-21-ம் நிதி ஆண்டில் ரூ.9.18 லட்சம் கோடி அளவிலும், 2019-20-ம் நிதி ஆண்டில் ரூ.9.56 லட்சம் கோடி அளவிலும் வரி வசூலாகியிருந்தது.
அந்த வகையில், சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 48.4% அளவிலும், கரோனாவுக்கு முந்தைய வரி வசூலுடன் ஒப்பிடுகையில் 42.5% அளவிலும் நடப்பு நிதி ஆண்டில் வரி வசூல் அதிகரித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில், ரூ.11.08 லட்சம் கோடி வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த இலக்கு ரூ.12.5 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், மாற்றி அமைப்பட்ட இலக்கை விடவும் தற்போது கூடுதலாக 9% வரி வசூலாகியுள்ளது.
மொத்த நேரடி வரி வசூலில் நிறுவன வரி 52.75 சதவீதம். மீதமுள்ள தொகை வருமான வரி மற்றும் ஏனைய நேரடி வரிகள் மூலம் வசூலாகி உள்ளது.
- பிடிஐ