

சென்னை: தமிழகத்தில் சிமென்ட் விலை உயர்த்தப்படவில்லை என்று சிக்மா அமைப்பு விளக்கம் அளித் துள்ளது.
இது தொடர்பாக தென்னிந்திய சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் (சிக்மா) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிமென்ட்விலை உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், இதனால் சாதாரன மக்கள்பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் சிலரால் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
சராசரி விலை குறைவு
அதேநேரம், கடந்த நிதியாண்டைக் காட்டிலும் தற்போது சிமென்ட் சராசரி விலை குறைவாக உள்ளது என்பதே உண்மை நிலையாகும்.
மறுபுறம், தமிழகத்தில் வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வரும் சிமென்ட் நிறுவனங்களின் நிலையை யாரும் கவனத்தில் கொள்வதில்லை.
சிமென்ட் தயாரிப்புக்கு எரிபொருள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து ஆகியவை முக் கிய செலவீனங்களாகும்.
தமிழகத்தில் எரிபொருள் மற்றும் மின்சாரத் தேவைக்கு, இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியையே சார்ந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலை, கடந்த சில மாதங்களில் 4 முதல் 5 மடங்கு வரை அதிகரித்துள்ளது.
இதுதவிர, ரஷ்யா-உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர்ச் சூழலால், தற்போது நிலக்கரி கிடைப்பது அரிதாகி வருகிறது. அதேபோல, டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவும் உயர்ந்துள்ளது.
எவ்வித உதவிகளும் கிடைக்காத சூழலில், தமிழத்தில் சிமென்ட்தொழில் செய்வதே கேள்விக்குறி யாகிவிட்டது. இத்தகைய நெருக்கடியான நிலையில் இந்த தொழில் துறைக்கு உதவுவதற்கான செயல்பாடுகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.