இந்தியாவில் இருந்து வெளியேற டெலிநார் திட்டம்?

இந்தியாவில் இருந்து வெளியேற டெலிநார் திட்டம்?
Updated on
1 min read

தொலைத்தொடர்பு துறையில் ஈடுபட்டுள்ள டெலிநார் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளது. செயல்பாடுகளில் மூலம் 2,530 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை நியாயமான விலையில் கிடைக்கவில்லை என்றால் வெளியேறுவதாக கூறியிருக்கிறது.

இந்தியாவில் நீண்ட காலத்துக்கு இருப்பது என்பது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை கிடைப்பதை பொறுத்து இருக்கிறது. தற்போதைய அலைவரிசையை வைத்து சந்தையில் போட்டி போட இயலாது என்று டெலிநார் நிறுவனத்தின் சர்வதேச சிஇஒ தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்தை எதிர்நோக்கி இருக் கிறோம். இந்தியாவில் லாபம் சம்பாதிப்பதற்காக இருக்கிறோம். வருமானம் இல்லை என்னும்பட்சத்தில் இதர வழிகளை பரிசீலனை செய்வோம் என்று கூறினார்.

ஒரு நபர் மூலமாக கிடைக்கும் வருமானம் 8 சதவீதம் வரை சரிந்திருக்கிறது. தற்போது வாரணாசியில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இன்னும் இரண்டு மாதத்துக்குள் மேலும் 8 நகரங்களில் அதிவேக சேவை அறிமுகப்படுத்த டெலிநார் திட்டமிட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in