

உலகில் உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ள பத்து நாடுகளை ஐ.நா தொழில் மேம்பாட்டு கழகம் (யூஎன்ஐடிஓ) பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 6-வது இடம் கிடைத்துள்ளது. முன்னதாக இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 9-வது இடம் வழங்கப்பட்டிருந்தது.
கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவின் உற்பத்தித் துறை மதிப்பு முந்தைய ஆண்டை விட 7.6 சதவீதம் உயர்ந்திருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அதேசமயம் சர்வதேச அளவிலான உற்பத்தித் துறையின் வளர்ச்சி 2015-ம் ஆண்டில் 2.8 சதவீதம் மட்டுமே இருந்ததாகவும், முக்கிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதுமே இதற்கு காரணம் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் சீனா இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் கொரியா ஆகிய நாடுகள் உள்ளன. பத்தாவது இடத்தில் இந்தோனேஷியா இருக்கிறது.