

புதிய பண்ட் வெளியீடு களை கொண்டு வருவதில் மியூச் சுவல் பண்ட் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. 30-க்கும் மேற்பட்ட புதிய பண்ட் வெளியீடு கள் (என்எப்ஒ) செபியிடம் அனுமதி கோரியுள்ளன.
சிறு நகரங்கள் மற்றும் கிராமப் புற முதலீட்டாளர்களை கவர்வ தற்காக சில நிறுவனங்கள் ஹிந்தி யில் தங்களது திட்டங்களுக்கு பெயர் வைத்துள்ளன.
பால் விகாஸ் யோஜனா (குழந் தைகளுக்கான திட்டம்), கர் பச்சாத் யோஜனா (Kar Bachat Yojana) (வரி சேமிப்பு திட்டம்) என சில திட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் சொந்த மொழியில் திட்டங்களின் பெயர் இருக்கும் போது அவர்களிடம் எளிதாக விளக்க முடியும் என்று மஹிந்திரா ஏஎம்சி நிறுவனத்தின் சிஇஓ கூறினார்.