

உலகின் முன்னணி சங்கிலித் தொடர் பாஸ்ட்ஃபுட் நிறுவனமான கெண்டகி பிரைட் சிக்கன் (கேஎப்சி) தனது கடைகளில் உணவுகளை பரிமாற ஊழியர்களுக்குப் பதில் ரோபோக்களைப் பயன்படுத்த உள்ளது. `ஒரிஜினல் +’ என்ற திட்டம் ஷாங்காயில் உள்ள தேசிய மாநாடு மற்றும் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
செவ்வக வடிவ தலையுடன் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. இந்த ரோபோக்கு `டு மி (Du Mi)’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள் உணவுகள் விநியோகிப்பது முதல் பணம் செலுத்துவது வரை அனைத்து வேலைகளையும் செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறச் சட்டையை அணிந்து மிக அழகாக காட்சியளிக்கிறது இந்த ரோபோ.
பாஸ்ட்ஃபுட் உணவு துறையில் ரோபோக்ககளை அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களை முன்னணி இணையதள நிறுவனமான பய்டு டூய்ங் 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக மாநாட்டில் அறிமுகப்படுத்தியது.