

டாடா குழுமத்தை சேர்ந்த டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் மற்றும் டாடா அமெரிக்கா இன்டர்நேஷனல் கார்ப் ஆகிய நிறுவனங்களுக்கு ரூ.6,265 கோடி (94 கோடி டாலர்) அபராதமாக அமெரிக்கா விதித் திருக்கிறது.
எபிக் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மென்பொருளை தவறாக பயன் படுத்தியதற்காக இந்த இரண்டு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக் கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் எபிக் சிஸ்டம் நிறுவனத்துக்கு 1,600 கோடி ரூபாயை (24 கோடி டாலர்) கண்டிப்பாக செலுத்த வேண் டும். தவிர இந்த குற்றத்துக்காக 70 கோடி டாலரை இந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
எபிக் சிஸ்டம் நிறுவனம் டிசிஎஸ் மற்றும் டாடா அமெரிக்கா நிறுவனங்கள் மீது 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாடிசன் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. எங்களுடைய வர்த்தக ரகசியங்களை பயன்படுத் தியது, நிறுவன தகவல்களை பயன்படுத்தியது என டாடா நிறு வனங்கள் மீது பல குற்றங்களை சுமத்தியது எபிக். டிசிஎஸ் நிறுவனம் எங்களுடைய தகவல்களை பயன் படுத்தி தங்களுடைய வாடிக்கை யாளர்களுக்கு ஆலோசனை அளித்ததாகவும் கூறியிருந்தது.
டிசிஎஸ் நிறுவன பணியாளர் கணக்கில் இருந்து இந்தியா மற்றும் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் இருந்து 6477 ஆவணங் கள் பதிவிறக்கம் செய்யப்பட்டதாக வும் எபிக் குற்றச்சாட்டில் குறிப்பிட்டிருந்தது.