ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத வீழ்ச்சி: கச்சா எண்ணெய் விலை உச்சம்

ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத வீழ்ச்சி: கச்சா எண்ணெய் விலை உச்சம்
Updated on
2 min read

நியூயார்க்: உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள தடை காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு இன்று சரிவு கண்டது. அதுபோலவே கச்சா எண்ணெய் விலையும் கடும் உயர்வு கண்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா மீது கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு பீப்பாய் 100 டாலர்களை தாண்டியது. ஐரோப்பா முழுவதுமே போர் பதற்றம் காரணமாக உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டது. தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலை ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையின் காரணமாகக் கடந்த வாரம் 120 டாலர் வரையில் உயர்ந்த நிலையில், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் டபிள்யூடிஐ மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 130 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

விலை அதிகமான ஏற்றம் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. வர்த்தகம் மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை தொடர்ந்து உயருகிறது.

கச்சா எண்ணெய் விலை ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையின் காரணமாகக் கடந்த வாரம் 120 டாலர் வரையில் உயர்ந்த நிலையில், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் டபிள்யூடிஐ பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 130 டாலராக உயர்ந்தது.

இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தத்து வருகின்றன. இதுமட்டுமின்றி முதலீடுகளை பல நாடுகளும் டாலர்களில் மாற்றி வருவதால் அதன் மதிப்பு உயர்ந்து பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 77.96 ஆக சரிவடைந்தது.

அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு கடந்த வாரம் 76.22 ஆக சரிந்தது. தொடர்ந்து 4-வது நாளாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவினைக் கண்டுள்ளது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வீழ்ச்சி கண்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in