

இந்த ஆண்டு தொழில் துறையினர் அதிக எண்ணிக்கையில் வேலைக்கு ஆள்களைத் தேர்வு செய்வர் என தெரிகிறது. அத்துடன் சராசரியாக 11 சதவீதம் முதல் 13 சதவீத அளவுக்கு சம்பள உயர்வு இருக்கும் என டீம் லீஸ் நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.
பணியாளர்களை அளிக்கும் சேவை நிறுவனமான டீம் லீஸ், இந்திய தொழில்துறையில் குறிப் பிடத்தக்க மாற்றங்கள் தெரிவ தாகக் குறிப்பிட்டுள்ளது. திறமை யானவர்களைத் தக்க வைத்துக் கொள்வதில் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படுவதாக தெரி வித்துள்ளது.
இந்த ஆண்டும் இரட்டை இலக்க ஊதிய உயர்வு இருக்கும் என்றும் 42 சதவீதம் பேரின் ஊதியம் கணிசமாக அதிகரிக்கும் என்றும் கணித் துள்ளது.
தகவல் தொழில்நுட்பம், வேளாண் மற்றும் வேளாண் ரசாயனம், அதிகம் விற்பனை யாகும் நுகர்வோர் பொருள், மருந்து தயாரிப்பு, ஹோட்டல், சுற்றுலா, சில்லரை வர்த்தகம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் சராசரியாக ஊதிய உயர்வு 11% முதல் 13% வரை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.