சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் இன்று முதல் குறைகிறது

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் இன்று முதல் குறைகிறது
Updated on
1 min read

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விட்டி விகிதம் இன்று முதல் குறைக்கப்படுகிறது. பிபிஎப், கிஸான் விகாஸ் பத்திரம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் ஆகியவற்றுக்கான வட்டி விகிதம் இன்று முதல் குறைக்கப்படுகிறது. அதிகபட்சம் 1.3 சதவீதம் வரை வட்டி குறைக்கப்படுகிறது.

ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 தேதி வரையிலாக காலத்துக்கு பிபிஎப் வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக 8.7 சதவீதமாக இருந்தது. அதேபோல கிஸான் விகாஸ் பத்திரத்தின் வட்டி விகிதம் 8.7 சதவீதத்தில் இருந்து 7.8 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.

மூத்த குடிமக்களுக்கான ஐந்து வருட டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி 9.2 சதவீதத்தில் இருந்து 8.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி திட்டத்தில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு 8.6 சதவீதமாக வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக 9.2 சதவீதம் வட்டி இருந்தது.

முன்பு வட்டி விகிதம் ஒவ்வொரு நிதி ஆண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்டது. இப்போது அரசாங்க கடன் பத்திரங்களுக்கு ஏற்ப காலாண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in