

நடப்பாண்டின் முதல் காலாண்டில் பிரைவேட் ஈக்விட்டி முதலீடு 24 சதவீதம் உயர்ந்து 360 கோடி டால ராக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 292 கோடி டால ராக பிரைவேட் ஈக்விட்டி முதலீடு இருந்தது. முந்தைய டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது 9 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
10 கோடி டாலருக்கும் மேலான பெரிய 12 முதலீடுகள் இந்த காலாண்டில் நடந்துள்ளன. இ-காமர்ஸ், பைனான்ஸியல் சர்வீசஸ், ஹெல்த்கேர் உள்ளிட்ட துறைகளில் இந்த முதலீடு வந்துள்ளது.
இந்த காலாண்டில் 144 முதலீடுகள் மட்டுமே வந்தன. ஆனால் கடந்த காலாண்டில் 191 முதலீடுகள் வந்திருந்தன.
இந்த பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டில் ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறையில் 34 சதவீத முதலீடு வந்துள்ளது. 82 முதலீடுகள் மூலம் 122.2 கோடி டாலர் முதலீடுகள் வந் துள்ளன. அதனை தொடர்ந்து வங்கி மற்றும் நிதிச்சேவை சார்ந்த துறைக்கு மொத்த முதலீட்டில் 26 சதவீதம் வந்துள்ளது. இந்த துறை யில் 12 முதலீடுகள் மூலம் 95.5 கோடி டாலர் முதலீடு வந்துள்ளது.
பட்டியலிடப்பட்ட நிறுவனங் களில் 7 சதவீத முதலீடு வந்துள் ளது. இதில் மேக்ஸ் பைனான் ஸியல் சர்வீசஸ் நிறுவனத்தில் 14 கோடி டாலரை கேகேஆர் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.