Published : 03 Mar 2022 06:29 AM
Last Updated : 03 Mar 2022 06:29 AM
பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி வர்த்தகம் தொடர்பான விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அகில இந்திய விளம்பர தர நிர்ணய அமைப்பு (ஏஎஸ்சிஐ) இதை வெளியிட்டுள்ளது.
கிரிப்டோ கரன்சி தொடர்பான வர்த்தக விளம்பரங்களில் மிகவும் பிரபலமானவர்களை நடிக்க வைக்கும் முயற்சியில் பெரு நிறுவனங்கள் ஈடுபட் டுள்ளன. இந்நிலையில் விளம் பரம்பங்களின் முடிவில்பொறுப்பு துறப்பு வெளியிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இதில் முதலீடு செய்வதால் கிடைக்கும் லாபம்உள்ளிட்ட தகவல்களை வெளியிட வேண்டும். அது துல்லியமானதாகவும், போதுமான தகவல்களை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும். அதேபோல எதிர்காலத்தில் லாபம் தரும் என்ற உத்தரவாதத்தை அளிப்பதாக இருக்கக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல சிறியவர்கள் இதில் நேரடியாக ஈடுபடுவது போன்ற விளம்பரங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட் டுள்ளது.
இதில் முதலீடு செய்வது மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுவது ஒரு தனி நபரின் அடையாளமாக சித்தரிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது. அனைத்துக்கும் மேலாக யாருக்காக விளம்பரம் வெளியயிடப்படுகிறது என்பன போன்ற விவரம் கட்டாயம் தெரிவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை முதலீட்டாளர்களின் முதலீட்டு போக்கை கருத்தில் கொண்டு விளம்பர மற்றும் டிஜிட்டல் சொத்து சார்ந்த சேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று ஏஎஸ்சிஐ தலைவர் சுபாஷ் காமத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT