உருக்கு விலை வீழ்ச்சி: மிட்டலின் சொத்து ரூ. 20 ஆயிரம் கோடி சரிவு

உருக்கு விலை வீழ்ச்சி: மிட்டலின் சொத்து ரூ. 20 ஆயிரம் கோடி சரிவு
Updated on
1 min read

சர்வதேச அளவில் உருக்கின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டில் தொழிலதி பர் லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு 208 கோடி பவுண்ட் (சுமார் ரூ. 20 ஆயிரம் கோடி) அளவுக்கு சரிந் துள்ளது. இதனால் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் மிட்டல் 11-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஹிந்துஜா சகோதரர்கள் தொடர்ந்து இரண்டாமிடத்தில் உள்ளனர். இவர்களது சொத்து மதிப்பு 1300 கோடி பவுண்ட்களாகும்.

1950களில் மும்பையிலிருந்து பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்த டேவிட் மற்றும் சைமன் ரூபன் சகோதரர்கள் முதலிடத்தில் உள்ளனர். இவர்களது சொத்து மதிப்பு 1310 கோடி பவுண்ட்களாகும். கடந்த ஆண்டைக் காட்டிலும் இவர்களது சொத்து மதிப்பு 340 கோடி பவுண்ட் அதிகரித்துள்ளது. சகாரா நிறுவனத்துக்குச் சொந்தமான கிராஸ்வெனோர் ஹோட்டலை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியவர்களில் இந்த சகோதரர்களும் அடங்குவர்.

கடந்த ஆண்டு பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த பலர் இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளப் பட்டுள்ளனர். இதில் குறிப்பிடத் தக்கவர் வெளிநாடு வாழ் இந்தியரான லார்டு ஸ்வராஜ் பால். கடந்த ஆண்டு பட்டியலில் 44-வது இடத்திலிருந்த இவர் தற்போது 154-வது இடத்தில் உள்ளார்.

2008-ம் ஆண்டிலிருந்து இப்பட்டியலில் இடம்பெற்று வந்த ஆர்சிலர் மிட்டலின் சொத்து 2770 கோடி பவுண்ட்டாக இருந்தது. இப்போது வெறும் 712 கோடி பவுண்டாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 7-வது இடத்திலிருந்த மிட்டல் தற்போது 11-வது இடத்தில் உள்ளார்.

பார்முலா கார் பந்தய வீரர் லூவிஸ் ஹாமில்டன் தற்போது 10 கோடி பவுண்ட் சொத்துடன் இந்தப் பட்டியலில் முதல் முறையாக இடம்பெற்றுள்ளார். இந்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் பிரிட்டனிலிருந்து மட்டும் 120 பேர் இடம்பெற்றுள்ளனர்.

உலக அளவில் 50 கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் சகோதரர்கள் முகேஷ் மற்றும் அனில் அம்பானி ஆகியோர் 30-வது இடத்தில் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு 1790 கோடி பவுண்டாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in