

புதுடெல்லி: பாரத்பே நிறுவனத்தின் இணை நிறுவனமும் அதன் நிர்வாக இயக்குநருமான அஷ்னீர் குரோவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இயக்குநர் குழு கூட்டத்தில் அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
திங்கள் கிழமை இவரதுமனைவி மாதுரி ஜெயின்குரோவர் இயக்குநர் குழுவிலிருந்து நீக்கப்பட்டார். நிதி முறைகேடு காரணமாக அவர் வெளியேற்றப்படுவதாக இயக்குநர் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போலியான பில்கள் தயாரித்து தனது சொந்த அழகு பராமரிப்புக்கு செலவிட்டது மற்றும் வெளிநாடு பயணம் மேற்கொண்டது ஆகியவை காரணமாக இவர் இயக்குநர் குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.
அஷ்னீர் குரோவர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என இந்நிறுவன ஆலோசனை நிறுவனமான பிரைஸ்வாட்டர் கூப்பர்ஸ் பரிந்துரைத்திருந்தது. இந்நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில் இவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முழு அதிகாரமும் இயக்குநர் குழுவுக்கு உள்ளது. இந்நிலையில் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக குரோவர் இயக்குநர் குழுவுக்குத் தெரிவித்துள்ளார்.