

நீடித்த பொருளாதார மீட்சிதான்மத்திய அரசின் முன்னுரிமை என்றும் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பல தளங்களில் முடுக்கிவிடும் வகையில்உருவாக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நேற்று மும்பையில், தொழில் துறையினர் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். அப்போது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் குறித்தும் பொருளாதார வளர்ச்சி சார்ந்து மத்திய அரசின் இலக்கு குறித்தும் அவர் பேசியதாவது:
கரோனாவால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நாட்டின் பொருளாதாரம் மீண்டு வரும் சூழலில் 2022-23-ம்நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் பொருளாதார மீட்சிதான் நாம் அதிக கவனம்செலுத்த வேண்டிய ஒன்றாகும்.நீடித்த, நிலையான பொருளாதாரமீட்சியை மத்திய அரசு முன்னுரிமையாகக் கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதில் உள்கட்டமைப்பு திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அந்த வகையில் தற்போ தைய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கொடுக் கப்பட்டிருக்கும் முக்கியத்துவ மானது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பல தளங்களில் முடுக்கிவிடும்.
கரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில் மக்களுக்கு நிதி உதவி வழங்க நாட்டின் பரிவர்த்தனைக் கட்டமைப்பு பெரும் உதவியாக அமைந்தது. மேலும், கல்வித் துறையிலும் வேளாண் துறையிலும்தொழில்நுட்பங்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.-பிடிஐ