

மும்பை: ரஷ்யா, உக்ரைன் இடையே போர்பதற்றம் ஏற்பட்ட நிலையில், இம்மாத தொடக்கம் முதலே உலக அளவில் பங்குச் சந்தைகளில் நிச்சயமின்மை நிலவியது.
இது இந்திய பங்குச் சந்தைகளிலும் பிரதிபலித்தது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்ததால், பங்குச் சந்தைகளில் நிச்சயமின்மை மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், இந்தியப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீட்டாளர்கள் பிப்.1 முதல் 18 வரையில் ரூ,18,856 கோடி முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனர். மொத்தமாக, ரூ.15,342 கோடி மதிப்பிலான பங்குகளையும் ரூ.3,629 கோடி மதிப்பிலான பத்திரங்களையும் அவர்கள் விற்றுள்ளனர். பங்குச் சந்தையில் நிலைத்தன்மை ஏற்படாதவரையில் அந்நிய முதலீடு வெளியேற்றம் தொடரும் என்று கூறப்படுகிறது.