Published : 21 Feb 2022 12:47 PM
Last Updated : 21 Feb 2022 12:47 PM
புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் 2 லட்சம் பேருக்கு வேலை வழங்குகின்றன என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதல் ‘டெக் ஸ்டார்ட்-அப் கான்க்ளேவ் அன்ட் அவார்ட்ஸ் சமிட்’ டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது:
இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இதனால் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்குவதற்கான சிறந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இப்போது நாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இவற்றில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 2021-ல் மட்டும் 10 ஆயிரம் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அதேநேரம், இந்தியாவில் ஸ்டார்ட்-அப் கலாச்சாரம் பெரும்பாலும் பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பெரிய நகரங்களில் மட்டுமே உள்ளது. இது மேலும் பல நகரங்களுக்கு விரிவடைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT