Published : 19 Feb 2022 08:40 AM
Last Updated : 19 Feb 2022 08:40 AM

எல்ஐசி பங்கு விண்ணப்பத்துக்கு பான்கார்டு விவரங்கள் அவசியம்: பிப்.28-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்

சென்னை

எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்குக்கு விண்ணப்பிக்க பாலிசிதாரர்கள் தங்கள் பான்கார்டு விவரங்களை வரும் 28-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னணி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), விரைவில் பொதுப் பங்கு வெளியிட உள்ளது. இதில் விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற, ஒவ்வொரு பாலிசிதாரரும் வரும் 28-ம் தேதியோ அல்லது அதற்கு முன்பாகவோ பாலிசி பதிவுகளில் தங்களது பான்கார்டு விவரங்களை அப்டேட் செய்திருக்க வேண்டும்.

பான்கார்டு விவரங்களை: https://licindia.in/Home/Online-PAN-Registration என்ற எல்ஐசி இணையதளத்தில் நேரடியாகவோ அல்லது ஏஜென்ட்கள் மூலமாகவோ பதிவு செய்யலாம் என எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x