

இந்த வாரம் முக்கியமான பொருளா தார தகவல்களான தொழில் உற் பத்தி குறியீடு(ஐஐபி), பணவீக்கம் உள்ளிட்டவை வர இருப்பதால் இவற்றைப் பொறுத்து பங்குச் சந்தை வர்த்தகம் இருக்கும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.
அதே சமயம் அந்நிய முதலீட் டாளர்கள், கச்சா எண்ணெய் நில வரம் மற்றும் ரூபாய் மதிப்பு ஆகிய வையும் முக்கிய பங்கு வகிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
வரும் செவ்வாய்க்கிழமை, பண வீக்கம் மற்றும் தொழில் உற்பத்தி குறியீடு குறித்த தகவல்கள் வெளியாக இருக்கின்றன.
இந்த வாரம் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்கள் விடுமுறை காரணமாக நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைவாக இருக்கும் என்பதால் வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் இருக்கலாம்.
வரும் வியாழன் அன்று அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் வெள்ளிக்கிழமை ராம நவமி ஆகிய காரணங்களால் பங்குச்சந்தைக்கு விடுமுறை.
அடுத்த வாரங்களில் நிறுவனங் களின் காலாண்டு மற்றும் நிதி ஆண்டு முடிவுகள் வரத் தொடங்கி விடும் என்பதால் வரும் வாரங்களில் நிதி நிலை அறிக்கைகள் முக்கிய பங்கு வகிக்கும். வரும் வெள்ளிக்கிழமை இன்போசிஸ் நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் வர இருக்கின்றன.
ரூ.7,600 கோடி அந்நிய முதலீடு
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்திருக்கும் சூழ்நிலையில் நடப்பு மாதத்தில் இதுவரை 7,600 கோடி ரூபாய் அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்திருக்கிறது. கடந்த நவம்பர் முதல் பிப்ரவரி வரையில் ரூ.41,661 கோடியை இந்திய சந்தையில் இருந்து வெளியே எடுத்த சூழலில், மார்ச் மாதம் ரூ.19,967 கோடி முதலீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஏப்ரலிலும் அந்நிய முதலீடு தொடர்கிறது.
இதில் இந்திய பங்குச்சந்தையில் 3,469 கோடி ரூபாயும், இந்திய கடன் சந்தையில் ரூ.4,152 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.