

சென்னை: பரஸ்பர நிதித் திட்டங்களை வகுத்து செயல்படுத்தும் ஹெச்டிஎப்சி அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் இரண்டு முதலீட்டுத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஹெச்டிஎப்சி நிப்டி 100 இண்டெக்ஸ் பண்ட் மற்றும் ஹெச்டிஎப்சி நிப்டி 100 ஈக்வல் வெயிட் இண்டெக்ஸ் பண்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த நிதித் திட்டங்களில் (என்எப்ஓ) வரும் 18-ம் தேதி வரைமுதலீடு செய்யலாம். குறிப்பிட்ட நிரந்தர வருமானம் பெற விரும்புவோருக்கு ஏற்ற நிதித் திட்டங்கள் இவை என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய பங்குச் சந்தையில் பிரபலமான முன்னணி 100 நிறுவனங்களில் முதலீடு செய்து பலனடைவதற்கான வாய்ப்பை இந்த 2 நிதித் திட்டங்களும் அளிக்கும் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நவ்நீத் முனோத் தெரிவித்துள்ளார்.
பரஸ்பர நிதித் திட்ட முதலீடுகளில் தங்கள் நிறுவனத்துக்கு 19 ஆண்டுகளுக்கும் மேலானஅனுபவம் உள்ளது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப நிதித் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.