டைம் பத்திரிகையின் பட்டியலில் 7 இந்தியர்கள்

டைம் பத்திரிகையின் பட்டியலில் 7 இந்தியர்கள்
Updated on
1 min read

உலகின் செல்வாக்கு மிக்கவர் களின் பட்டியலை டைம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஏழு இந்தியர்கள் உள்ளனர்.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், டென்னிஸ் வீரர் சானியா மிர்சா, நடிகை பிரியங்கா சோப்ரா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, சுற்றுச் சூழல் ஆர்வலர் சுனிதா நரைன் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள்.

ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டியன் லகார்ட், ஆஸ்கார் விருதினை வென்ற டி காப்ரியோ ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.

இந்த பட்டியலில் பிரதமர் மோடியும் பரிசீலனை செய்யப்பட்டார். ஆனால் முதல் 100 இடங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கடந்த வருடம் இந்த பட்டியலில் மோடி இருந்தார். பட்டியலில் 40 பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.

விளாதிமிர் புடின், ஹிலாரி கிளிண்டன், பாரக் ஒபாமா, டொனால்ட் டரம்ப், ஜான் கெரி, டிம் குக், மார்க் ஸூகர்பெர்க் உள்ளிட்ட பலரும் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in