

சென்னை: இந்தியன் வங்கி அதிகாரிகளுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதற்காக, சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘கம்யூனிகேட்டிவ் தமிழ்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
இதன் மூலம், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் அதிகாரிகள், தமிழ் கற்றுக் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு உரிய சேவை வழங்க முடியும்.
இந்த தொடக்க விழாவில், இந்தியன் வங்கி செயல் இயக்குநர் செனாய், சென்னை பல்கலை. துணைவேந்தர் கவுரி பங்கேற்றனர்.