என்எஸ்இ பட்டியலில் உள்ள 56 நிறுவனங்களில் பெண் இயக்குநர்கள் இல்லை

என்எஸ்இ பட்டியலில் உள்ள 56 நிறுவனங்களில் பெண் இயக்குநர்கள் இல்லை
Updated on
1 min read

என்எஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 56-ல் பெண் இயக்குநர்கள் நியமிக்கப் படவில்லை. பல முக்கியமான நிறுவனங்கள் கூட பெண் இயக்குநர்கள் நியமனம் செய்ய வில்லை என்று பிரைம் டேட்டா பேஸ் நிறுவனம் தெரிவித் திருக்கிறது.

செபியின் விதிமுறைகள்படி கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் முதல் பட்டியலிடப்பட்ட நிறுவனங் களில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநராவது இருக்க வேண்டும். ஆனால் பல முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களே பெண் இயக்குநர்களை நியமனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

டாடா பவர், அல்ஸ்தோம் இந்தியா, பொதுத்துறை நிறுவனங்களான ஓஎன்ஜிசி, கெயில், பிஇஎம்எல், பிபிசிஎல், ஹெச்எம்டி, எம்எம்டிசி, நேஷனல் பெர்டிலைசர்ஸ், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன், சிண்டிகேட் வங்கி, ஆர்இசி, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், ஸ்டேட் டிரேடிங் கார்ப், மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ், லாங்கோ, இன்ப்ரா, டிபி கார்ப், செர்வலஷ்மி பேப்பர்ஸ் ஆகிய நிறுவனங்கள் பெண் இயக்குநர்களை நியமிக்கவில்லை.

2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டு, 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் பெண் இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று செபி கூறியிருந்தது. அதன்பிறகு இந்த காலக்கெடுவை ஏப்ரல் 1,2015 வரை நீட்டித்தது. இருந்தும் கூட பல நிறுவனங்கள் பெண் இயக்குநர்களை நியமனம் செய்யவில்லை.

இந்த நிறுவனங்கள் இப்போது பெண் இயக்குநர்களை நியமனம் செய்தாலும் 1.42 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். தவிர 2015 அக்டோபர் 1-ம் தேதிக்கு பிறகான ஒவ்வொரு நாளுக்கும் 5,000 ரூபாய் செலுத்த வேண்டும்(பெண் இயக்குநர் நியமிக்கும் நாள் வரை).

செபியின் விதிமுறைகள்படி கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் முதல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநராவது இருக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in