குரு பைனான்ஸ் நிகர லாபம் 20 சதவீதம் உயர்வு

குரு பைனான்ஸ் நிகர லாபம் 20 சதவீதம் உயர்வு
Updated on
1 min read

ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் துணை நிறுவனமான குரு பைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 20 சதவீதம் உயர்ந்து 243 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 203 கோடியாக நிகர லாபம் இருந்தது.

மேலும் 2015-16 நிதியாண்டிற் கான நிறுவனத்தின் வருமானமும் 31.49 சதவீதமாக உயந்துள்ளது. நிறுவனத்தின் நிகர மதிப்பு 711 கோடி ரூபாயிலிருந்து 835 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

வரிகள் உட்பட இந்த ஆண்டுக்கு வழங்கப்படும் டிவிடெண்ட் விகிதம் 41.34 சதவீதமாக இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் நிறுவனத்தின் கடனும் 25 சதவீதம் அதிகரித்து 11,114 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8,926 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in