

நடப்பு நிதி ஆண்டில் முதல் பங்கு விலக்கலை மத்திய அரசு தொடங்கியது. என்ஹெச்பிசி பங்குகள் முழுமையாக பரிந்துரை யானது. இதன் மூலம் 2,700 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கிடைக் கும். 11.36 சதவீத பங்குகளை மத்திய அரசு விலக்கிக்கொண்டது. சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப் பட்ட பங்குகளுக்கு 1.65 மடங்குக்கு விண்ணப்பங்கள் வந்திருந்தன. சிறு முதலீட்டாளர்களுக்கு 5 சதவீத தள்ளுபடி விலையில் பங்குகள் வழங்கப்பட்டன.
நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 1.58 மடங்கு விண்ணப்பங்கள் வந்திருந்தன. 21.75 ரூபாயில் இந்த பங்குகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. ஆனால் நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 2 சதவீதம் சரிந்து 21.10 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
இந்த பங்கு விலக்கல் முடிவில் என்ஹெச்பிசி நிறுவனத்தில் மத்திய அரசின் பங்கு 85.96 சதவீதத்தில் இருந்து 74.60 சதவீதமாக குறைந்திருக்கிறது. மத்திய அரசின் பங்குகளை 75 சதவீதத்துக்கு கீழ் கொண்டு வந்ததன் மூலம் செபி விதிமுறைகளை இந்த நிறுவனம் பூர்த்தி செய்திருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டில் பங்குவிலக்கல் மூலம் 56,500 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த இலக்கை எட்ட ஆயில் இந்தியா, நேஷனல் பெர்டிலைசர்ஸ், ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் (ஆர்சிஎப்) ஆகிய நிறுவனங்களில் பங்கு விலக்கல் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது.
நேஷனல் பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் 15 சதவீத பங்குகளையும், ஆர்சிஎப் நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளையும், ஆயில் இந்தியா நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கை தொடங்கப்பட்டிருக்கிறது. தற்போதைய சந்தை விலையில் ஆயில் இந்தியா மூலம் 1,900 கோடி ரூபாய், என்எப்எல் மூலம் ரூ. 230 கோடி மற்றும் ஆர்சிஎப் மூலம் ரூ.130 கோடி திரட்ட முடியும்.
ஆயில் இந்தியா நிறு வனத்தில் மத்திய அரசு வசம் 67.64 சதவீத பங்குகள் உள்ளன. அதேபோல என்எப்எல் மற்றும் ஆர்சிஎப் ஆகிய நிறுவனங் களில் முறையே 89.71 சதவீதம் மற்றும் 80 சதவீத பங்கு கள் மத்திய அரசு வசம் உள்ளன.