Published : 05 Feb 2022 02:35 PM
Last Updated : 05 Feb 2022 02:35 PM

தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு; நிலையற்ற விலை: வானிலை காரணம்: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை நிலையற்றமுறையில் இருப்பதற்கு வானிலை நிலவரம் உள்ளட்டவை காரணமாக இருப்பதாக உணவு பதனத் தொழில்கள் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

‘தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு’ (டிஓபி) ஆகியவற்றின் நிலையற்ற விலைக்கு வானிலை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. பாரம்பரியம் அல்லாத பகுதிகளில் இருந்தும், நாட்டின் இதர பகுதிகளில் இருந்தும் இவற்றின் வரவு, பயிரிடுதல் முறையில் பருவத்திற்கு ஏற்ப மாற்றம், அடுத்த ரபி / கரீஃப் பருவத்திற்கு முன்கூட்டிய வரவு ஆகியவையும் காரணங்களாக உள்ளன.

உணவுப் பொருட்களின் விலையை சீராக்கி விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் உதவி செய்யும் வகையில் ஆபரேஷன் கிரீன் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அறுவடை காலத்தில் பொருட்களின் வரத்து அதிகரிக்கும் நிலையில் ‘தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு’ உள்ளிட்ட குறிப்பிட்ட காய்கறிகளுக்கும், பழங்களுக்கும் போக்குவரத்து, இருப்பு வைத்தல் ஆகியவற்றுக்கான செலவில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த உணவு பதனத் தொழில்கள் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் இதனைத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x