

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோ-51 என்ற புதிய நெல் ரகத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் சாகுபடி செய்வதற்கு ஏற்ற நெல் ரகம் கோ-51 என்கிறார் திருவாரூர் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவரான பேராசிரியர் க.சோழன்.
“105 நாள் வயது கொண்ட குறுகிய நாள் பயிர் கோ-51. மிகவும் சன்ன ரகம். சாயாமல் பயிர் நிலைத்து நிற்கும். பூச்சி தாக்குதலை எதிர்கொள்ளும் தன்மை நிறைந்தது. ஹெக்டேர் ஒன்றுக்கு 6,500 கிலோ மகசூல் தரக் கூடியது” என்கிறார் அவர்.
“மோட்டா ரகத்தைச் சேர்ந்த திருப்பதி சாரம்-5 என்ற நெல் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறுகிய கால பயிரான இந்த நெல் ரகமும் நல்ல விளைச்சலைத் தரக் கூடியது” என்று சோழன் கூறுகிறார்.
மேலும் விவரங்களை அறிய அவரை 94438 47067 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.