

புதுடெல்லி: 9 முக்கிய துறைகளில் உற்பத்தித் துறை 39 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி மாநிலங்களவையில் இதுகுறித்து கேள்வி ஒன்று அளித்த பதில் வருமாறு:
அகில இந்திய அளவில் காலாண்டுக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு ஆய்வை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி 2021 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டு காலத்தில் பொருளாதாரத்தின் 9 தேர்வு செய்யப்பட்ட துறைகளில் வேலைவாய்ப்பு 3.10 கோடியாக அதிகரித்துள்ளது. இது முதல் காலாண்டில் 3.08 கோடியாக இருந்தது.
2013-14 ஆம் ஆண்டில் 6-வது பொருளாதார கணக்கெடுப்பின்படி இத்துறைகளில் மொத்தம் 2.37 கோடியாக வேலைவாய்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. 9 துறைகளில் உற்பத்தித் துறையில் 39 சதவீதமும், கல்வித்துறையில் 22 சதவீதமும், சுகாதாரம், ஐடி துறைகளில் தலா 10 சதவீதமும், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைகள் முறையே 5.3 சதவீதம் மற்றும் 4.6 சதவீதமாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.