

புதுடெல்லி: கடந்த ஜனவரி மாதம் நாட்டின் ஏற்றுமதி 23.69% உயர்ந்துள்ளது. மொத்தமாக 34.06 பில்லியன் டாலர் அளவில் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. பொறியியல், பெட்ரோலியம், நகை ஆபரணம் ஆகிய துறைகளில் அதிக அளவில் ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இறக்குமதியும் ஜனவரியில் அதிகரித்துள்ளது. இறக்குமதி 23.74 சதவீதம் உயர்ந்து 52.01 பில்லியன் டாலராக உள்ளது. ஜனவரி மாதம் தங்கம் இறக்குமதி 40.42 சதவீதம் குறைந்து 2.4 பில்லியன் டாலராக உள்ளது. கச்சா எண்ணென்ய இறக்குமதி 21.3 சதவீதம் உயர்ந்து 11.43 பில்லியன் டாலராக உள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையிலான வர்த்தக இடைவெளி 17.94 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு ஜனவரி மாதம் அது 14.49 பில்லியன் டாலராக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில்ஏப்ரல் முதல் ஜனவரி வரையில் ஏற்றுமதி 46.53 சதவீதம் உயர்ந்து 335.44 பில்லியன் டாலாராக உள்ளது. முந்தைய நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் அது 228.9 பில்லியன் டாலராக இருந்தது. வர்த்தக இடைவெளி நடப்புநிதி ஆண்டில் 160.38 பில்லியன் டாலரக உள்ளது.முந்தைய நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் அது 75.87 பில்லியன் டாலராக இருந்தது.