

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பத்து நாள் பயணமாக நாளை அமெரிக்க செல்ல இருக்கிறார். இப்பயணத்தின்போது சர்வதேச செலாவணி மையம் மற்றும் உலக வங்கியின் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.
முதல் கட்டமாக வாஷிங்டன் செல்ல இருக்கும் அருண் ஜேட்லி சர்வதேச செலாவணி மையம் மற் றும் உலக வங்கி கூட்டத்தில் பங்கேற் கிறார். இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் மற்றும் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் கலந்துகொள்கின்றனர். இக்கூட்டங்களில் தற்போதைய பொருளாதார சூழல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
அதனை தொடர்ந்து வாஷிங் டனில் அமெரிக்க அதிகாரிகளை ஜேட்லி சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 17-ம் தேதி வாஷிங்டனில் இருந்து நியூயார்க் செல்லும் ஜேட்லி, அங்கு ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் ஏப்ரல் 19-ம் தேதி உரையாற்றுகிறார். இக்கூட்டத்தில் போதை மருந்துகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.