Published : 16 Apr 2016 10:23 AM
Last Updated : 16 Apr 2016 10:23 AM

இவரைத் தெரியுமா? : ரஃபேல் அலோன்சோ

விமான உற்பத்தி நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்தின் கரீபியன் பிராந்தியம் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான தலைவராக உள்ளார். 40 நாடுகளில் ஏர்பஸ் வர்த்தகச் செயல்பாடுகளுக்கு பொறுப்பு வகிக்கிறார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக விமான போக்குவரத்துத் துறையில் அனுபவம் கொண்டவர். இவரது பொறுப்பின் கீழ் சுமார் 1,000 விமானங்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளார்.

1981ல் முதன் முதலில் போயிங் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர், 1983ல் கன்ஸ்ட்ரக்‌ஷனஸ் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திலும் பணியாற்றினார். 1984ல் ஏர்பஸ் நிறுவனத்தில் இணைந்தார்.

ஏர்பஸ் நிறுவனத்தில் லத்தீன் அமெரிக்கா முதன்மை துணைத் தலைவர், கரீபியன் பிராந்திய வாடிக்கையாளர் விவகாரத் துறை தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

ஸ்பெயினைச் சேர்ந்தவர், மேட்ரிட் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்ஸ் இன்ஜினீயரிங் உயர்கல்வி முடித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தில் உள்ள நிர்வாக மேம்பாடு சர்வதேச கல்வி நிறுவனத்தில் மேலாண்மையியல் பட்டமும் பெற்றவர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x