Published : 02 Feb 2022 07:51 AM
Last Updated : 02 Feb 2022 07:51 AM
அரசுக்கு வரும் 1 ரூபாயில், நேரடி மற்றும் மறைமுக வரி மூலம் 58 பைசா, கடன் பத்திரங்கள் மற்றும் ஏனைய கடன்கள் மூலம் 35 பைசா, பங்கு விலக்கு போன்றவை மூலம் 5 பைசா, கடன் அல்லாத மூலதனங்கள் மூலம் 2 பைசா கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டது.
நேரடி மற்றும் மறைமுக வரி மூலம் கிடைக்கும் 58 பைசாவில், 16 பைசா ஜிஎஸ்டி மூலமும், 15 பைசா நிறுவன வரி மூலமும், 15 பைசா தனிநபர் வருமான வரி மூலமும், 12 பைசா சுங்க மற்றும் கலால் வரி மூலமும் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அரசு செலவிடும் 1 ரூபாயில், 20 பைசா மத்திய அரசின் கடனுக்கான வட்டிக்காகவும், 17 பைசா மாநிலங்களின் வரி பங்கீடுகளுக்காவும் செலவிடப்படுகிறது. ராணுவத்துக்கு 8 பைசா, மத்திய அரசு துறை சார்ந்த திட்டங்களுக்கு 15 பைசா, மத்திய அரசால் முன்னெடுக்கப்படும் ஏனைய திட்டங்களுக்கு 9 பைசா, ஓய்வூதியத்துக்கு 4 பைசா, மானியங்களுக்கு 8 பைசா,நிதிக் குழுமற்று ஏனைய பரிவர்த்தனைக்கு 10 பைசா, ஏனைய செலவினங்களுக்கு 9 பைசாஅளவில் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
முக்கிய அம்சங்கள்
உள்கட்டமைப்பு
# ‘கதி சக்தி’ தேசிய செயல் திட்டத்துக்கு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு.
# 2022-23-ல் தேசிய நெடுஞ்சாலை 25,000 கிலோ மீட்டர் விரிவாக்கப்படும்.
# விரைவுச் சாலைகளுக்கான தேசிய செயல் திட்டம் 2022-23-ல் உருவாக்கப்படும்.
# மெட்ரோ ரயில் திட்டங்கள் புதிய வசதிகளுடன் செயல்படுத்தப்படும்.
# அடுத்த மூன்று ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும்.
வேளாண் துறை:
# 1 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் கோதுமை, நெல், காரிஃப் மற்றும் ராபி பயிர்களின் கொள்முதல் அதிகரிக்கப்படும்.
# வேளாண் மற்றும் கிராமப்புற தொழில் சார்ந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க நபார்டு மூலம் நிதி உதவி.
# குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ரூ.2.37 லட்சம் கோடி ஒதுக்கீடு
# நாடு முழுவதும் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்.
# பயிர் மதிப்பீடு மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்புக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.
# 9 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் ரூ.40,000 கோடி நிதியில் கென் - பெத்வா நதிகள் இணைப்பு.
# கோதாவரி - பெண்ணையாறு - காவிரி உள்ளிட்ட 5 நதி இணைப்புத் திட்டங்களுக்கு அனுமதி.
கல்வி:
# டிஜிட்டல் பல்கலைக்கழங்கள் உருவாக்கப்படும்.
# ‘ஒரு வகுப்பு ஒரு டிவி சேனல்’ 12-லிருந்து 200 சேனலாக விரிவுபடுத்தப்படும்.
வேலைவாய்ப்பு:
# மேக் இன் இந்தியா திட்டம் மூலம் 14 துறைகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க திட்டம்
பாதுகாப்பு:
# 68% ராணுவத் தளவாடங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும்.
# பாதுகாப்பு துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகள் சார்ந்த பணிகளில் ஸ்டார்ட்அப் மற்றும் தனியார் நிறுவனங்
களும் ஈடுபடுத்தப்படும். இதற்கென்று பாதுகாப்புத் துறைக்கான ஆர்&டி பட்ஜெட்டில் 25% ஒதுக்கப்படுகிறது.
# ராணுத் தளங்கள், தளவாடங்கள் தொடர்பான வடிவமைப்பு மேற்கொள்ள தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.
டிஜிட்டல் மேம்பாடு:
# 2022-23-ல் டிஜிட்டல் நாணயத்தை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்யும்.
# மெய்நிகர் சொத்துகளுக்கு 30 சதவீதம் வரி விதிப்பு
# பதிவு நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில் ‘ஒரே நாடு ஒரே பதிவுமுறை’ திட்டம் கொண்டுவரப்படும்.
# 2022-23-ல் 5ஜி சேவை வழங்க முடிவு.
# தொழில் தொடங்குதல் மற்றும் தொழிற்செயல்பாட்டை எளிமைப்படுத்த 1,486 மத்திய விதிகள் ரத்து.
# கொள்முதல் சம்பந்தமான பரிவர்த்தனையை எளிமைப்படுத்த அனைத்து அமைச்சகங்களிலும் இணைய ரசீது முறை பின்பற்றப்படும்.
# மின்னணு பாஸ்போர்ட் வரும் நிதி ஆண்டியிலிருந்து வழங்கப்பட உள்ளது.
# மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் விரிவாக்கப்படும்.
வரி:
# நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கான கூடுதல் கட்டணம் 15%- ஆக நிர்ணயம்.
# கூட்டுறவு நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச மாற்று வரி விகிதம் 15 சதவீதமாக குறைப்பு.
# மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் வரி விலக்கு வரம்பை 10% லிருந்து 14% உயர்த்த பரிந்துரை.
# திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை இரண்டு ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய வரி செலுத்துவோருக்கு வாய்ப்பு.
# சோடியம் சயனைடு மீதான வரி உயர்த்தப்படுகிறது.
# குடைகள் மீதான வரி 20% ஆக உயர்த்தப்படுகிறது.
# ஸ்டீல் ஸ்கிராப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது.
# இறால் மீன் வளர்ப்பு தொடர்பான தொழில்களுக்கான சுங்க வரி குறைக்கப்படுகிறது.
# வைரங்கள், ரத்தின கற்கள் மீதான இறக்குமதி வரி 7.5% லிருந்து 5% ஆக குறைப்பு.
சுகாதாரம்:
# தேசிய டிஜிட்டல் சுகாதார கட்டமைப்பு உருவாக்கப்படும்.
# மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தொலைபேசி வாயிலான மனநல ஆலோசனை கட்டமைப்பு உருவாக்கப்படும்.
# 2 லட்சம் அங்கன்வாடிகளை மேம்படுத்த திட்டம்.
# 3.8 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க ரூ.60,000 கோடி ஒதுக்கீடு.
# பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 80 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT